×

D50-ல் ஹீரோயினாகும் தனுஷின் பேவரிட் நடிகை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

 

தனுஷுக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. அதனால் விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தையடுத்து தனது 50வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார். இந்த படம்  முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால் இந்த படத்திலிருந்து விஷ்ணு விஷால் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை அமலா பால் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக தனுஷுடன் அமலா பால் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் இணையவுள்ளார். அமலா பாலால்தான் தனுஷுக்கு நிறைய பிரச்னை ஏற்பட்டது. ஆனால் அவருடனே மீண்டும் நடிக்கிறாரா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.