நினைவுகளை புரட்டும் ரீ-ரிலீஸ் - ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்துபோன தனுஷ்!
Dec 3, 2023, 11:28 IST
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா கூட்டணியில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காலம் கடந்தும் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். புதிதாக ஒரு படம் வெளியானால் என்ன வரவேற்பு கிடைக்குமோ அதே வரவேற்பு ரீ-ரிலீஸுக்கும் கிடைத்தது. ரசிகர்களின் இந்த அன்பை பார்த்து நெகிழ்ந்து போன நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் எமோஷனலான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில்” 3 படத்தின் ரீ-ரிலீஸுக்கு கிடைத்த வரவேற்பு எமோஷனலாக உள்ளது, இந்த வரவேற்புக்கு கோடான கோடி நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.