×

ஏஆர் ரகுமான் இசையில் பாடும் தனுஷ்… இதயங்களை வென்ற செல்ஃபி!

தனுஷ், ஏஆர் ரகுமான் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார். ஊரடங்கு தளர்விற்குப் பின்னர் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மதுரையில் நடந்தது. தற்போது தனுஷ்
 

தனுஷ், ஏஆர் ரகுமான் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார். ஊரடங்கு தளர்விற்குப் பின்னர் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மதுரையில் நடந்தது.

தற்போது தனுஷ் ஏஆர் ரகுமானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் “நமது இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் ஒரு பாடல் மற்றும் அவருடன் அற்புதமான சாட்டிங்” என்று தெரிவித்துள்ளார்.