சூப்பர் லுக்கில் தனுஷ்... 'மாறன்' புகைப்படங்கள் வெளியீடு

 
maran movie


தனுஷின் 'மாறன்' படத்தின் பிரத்யேக புகைப்படங்களை பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. 

maran movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் நடிகர் தனுஷும், மாளவிகா மோகனனும் பத்திரிகையாளர்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் படத்தின் பிரத்யேக புகைப்படங்களை பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் நடிகர் தனுஷ் சூப்பர் லுக்கில் உள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.