×

வாத்திபடத்தின்  ‘வா வாத்திஃபஸ்ட் சிங்கிள் பாடல் அப்டேட்….

 

வாத்திபடத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் பற்றிய தகவல் வெளியீடு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்வாத்தி’., முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார்; படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.இவர்களோடு  சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன்பணிகள் நடைபெற்று வருகிறது, படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாத்தி படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. அதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.