இறுதிக்கட்டத்தில் ‘நானே வருவேன்’... புதிய போஸ்டரை வெளியிட்ட செல்வராகவன் !

 
nane varuven poster

 செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் இந்துஜா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

nane varuven poster

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.  கடந்த ஆண்டு துவக்கத்திலேயே இப்படத்தின் அறிவிப்பு வெளியான போதும்‌ படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தான் துவங்கியது. இதையடுத்து பல கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

தற்போது ஊட்டியில் நடைபெற்று இப்படப்பிடிப்பின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் தனுஷின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் மிரட்டும் வகையில் இருக்கும் தனுஷின் போஸ்டர் ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.