×

தனுஷ்- செல்வராகவன் கூட்டணி உறுதியானது!

தனுஷை வைத்து இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து செல்வராகவன் அப்டேட் கொடுத்துள்ளார். தனுஷ்- செல்வராகவன் கூட்டணிக்கு கோலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. ‘புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பாத நாளில்லை என்றே சொல்லலாம். தற்போது செல்வராகவன் தனுஷ் உடன் கூட்டணி அமைக்கவிருக்கும் படத்தின் அப்டேட் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “‘D’ உடன் பணிபுரியும் போது அது எப்போதுமே ஸ்பெஷலாகத் தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். அதோடு
 

தனுஷை வைத்து இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து செல்வராகவன் அப்டேட் கொடுத்துள்ளார்.

தனுஷ்- செல்வராகவன் கூட்டணிக்கு கோலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. ‘புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பாத நாளில்லை என்றே சொல்லலாம்.

தற்போது செல்வராகவன் தனுஷ் உடன் கூட்டணி அமைக்கவிருக்கும் படத்தின் அப்டேட் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “‘D’ உடன் பணிபுரியும் போது அது எப்போதுமே ஸ்பெஷலாகத் தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு கூர்ந்து எழுதிக் கொண்டிருக்குமாறு உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். எனவே இந்தக் கூட்டணியில் படம் உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது.

இப்படம் மார்ச் மாதம் முதல் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். செல்வராகவன் படத்திற்கான இசைக்காக அவருடன் இதுநாள் வரை பணியாற்றி வந்துள்ளார்.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராயுடன் இந்தி திரைப்படமான ‘அட்ரங்கி ரே’ படப்பிடிப்பில் கலந்து வருகிறார் . டிசம்பர் மாதத்திற்குள் அந்தப் படத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.