×

தனுஷுடன் இணைந்த வெளிநாட்டு நடிகர்... வெறித்தனமாக உருவாகும் 'கேப்டன்  மில்லர்' !

 

தனுஷ் நடிப்பில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் வெளிநாட்டு நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. 

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ராஜமெளலியின் இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.