×

'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு பிறகு மிரட்டலான பின்னணி இசை... 'கேப்டன் மில்லர்' குறித்து மெய்சிலிர்க்கும் ஜிவி பிரகாஷ் !

 

தனுஷ் நடிப்பில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். 

 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. தற்போது தென்காசி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட எட்டியுள்ள இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அவர் தற்போது 'கேப்டன் மில்லர்' ‌‌‌‌‌‌படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் பின்னணி இசைக்கு பிறகு இந்த படத்திற்கு தான் அதுபோன்ற பின்னணி இசை உருவாகியுள்ளது. அதை 'கேப்டன் மில்லர்' படத்தின் சில காட்சிகளுக்கு பொருந்தினேன். மிக அருமையான அமைந்துள்ளது. இந்த பின்னணி இசையை  விரைவில் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். ஜிவி பினகாஷின் இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.