×

இருமொழிகளில் வசூலை வாரி குவிக்கும் ‘வாத்தி’.. புதிய சாதனை படக்குழுவினர் மகிழ்ச்சி !

 
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வாத்தி’ படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.  இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

‘வாத்தி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை செவன் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நடிகர் தனுஷ் அறிமுகமாகியுள்ளார். 

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான இந்த படம் 8 நாட்களில் 75 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படம் தற்போது 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் படம் 100 கோடி வசூலித்துள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது.