×

சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘அசுரன்’ தேர்வு- தனுஷ் நெகிழ்ச்சி பதிவு…

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் 51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கணேஷ்
 

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் 51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

‘அசுரன்’ மற்றும் ‘தேன்’ ஆகிய படக்குழுவினருக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தான் நடித்த ‘அசுரன்’ படம் தேர்வாகி இருப்பது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“IFFI 2020 இந்தியப் பிரிவில் ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற எங்கள் அனைவருக்கும் இது ஒரு கவுரவம். மக்களுக்கான ஒரு படத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றி”. என்று குறிப்பிட்டுள்ளார்.