×

இசைப்புயலுடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்.. பிரம்மாண்டமாக உருவாகும் 50வது படம் !

 
தனுஷின் 50வது படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து விரைவில் தானே இயக்கி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. ‘ராயன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்திற்கான பணிகளை தனுஷ் செய்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. மிரட்டலான உருவாகவிருக்கிற இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.