அமரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ் : அப்டேட் இதோ..
Nov 8, 2024, 12:39 IST
கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தின் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களை இயக்கி வருகிறார். இளையராஜாவின் பையோபிக் படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷின் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது