×

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் மிரட்டும் சாணிக்காயிதம் போஸ்டர்!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணிக் காயிதம்’ படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இயக்குனராக பல பெரும் நடிகர்களை உருவாக்கிய செல்வராகவன் தற்போது அவரே நடிகராகக் களமிறங்குவதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு
 

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணிக் காயிதம்’ படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இயக்குனராக பல பெரும் நடிகர்களை உருவாக்கிய செல்வராகவன் தற்போது அவரே நடிகராகக் களமிறங்குவதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளதால் படம் ஹிட் அடையும் என்று கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.

தற்போது இந்தப் படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ரத்தக்கறையுடன் விரித்து வைக்கப்பட்ட ஆயுதங்களின் முன் குத்த வைத்து உற்காந்துள்ளனர். அதைப் பார்க்கும் போது கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்து போல உள்ளது. செல்வராகவன் தாடியுடன் மிரட்டல் லுக்கில் காணப்படுகிறார்.