×

தனுஷின் ‘வாத்தி’ ஓடிடி ரிலீஸ் எப்போது ?... புதிய அறிவிப்பு !

 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் உருவாகி வெளியானது.தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கல்வி வணிகமயமாதல் குறித்து இந்த படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது. 

இருமொழிகளிலும் இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 17-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் வெளியாகிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.