×

அடித்து துவம்சம் தனுஷ்.. 'வாத்தி' படத்தின் டிரெய்லர் வெளியீடு !

 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாத்தி'. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது. இதில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'வாத்தி' பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்த படத்தை 'தோழி பிரேமா', மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான 'நானே வருவேன்' படம் தோல்வியை சந்தித்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.