×

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் முக்கிய அப்டேட் நாளை ரிலீஸ் 

 


தனுஷ் நடிக்கும் Tere Ishk Mein படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.


தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  <a href=https://youtube.com/embed/RWdBFzmKL60?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/RWdBFzmKL60/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.