×

தனுஷின் ‘குபேரா’ :  கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது...!

 

குபேரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தனுஷின் 51வது திரைப்படமாக உருவாகி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.  இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். நடிகர் தனுஷ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.  <a href=https://youtube.com/embed/mdSNFVvboZw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/mdSNFVvboZw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

மேலும் ஆரம்பத்திலிருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.