×

தனுஷின் ‘குபேரா’ பட பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு!
 

 

தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் குபேரா படத்தில் இடம்பிடித்த போய்வா நண்பா பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ராயன்’ படத்தை தொடர்ந்து தனுஷ் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து இயக்கி வருகிறார். அதே நேரம் அவர் தெலுங்கில் உருவாகி வரும் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.  
இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது.
<a href=https://youtube.com/embed/sEIkwmUe-tA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/sEIkwmUe-tA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் விவேகா எழுதியுள்ள 'போய் வா நண்பா' என்ற பாடல் யூடியூப்பில் வெளியானது. தனுஷ் குரலில் வெளியான இந்தப் பாடல்  ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  சவ ஊர்வலத்தின் முன்பு நடனமாடும் வகையில் நடனக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. திரைப்பட செட் அமைக்கப்பட்டது முதல் இசையமைத்தது வரை நடந்த ருசிகர சம்பவங்களை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது.