×

வெளியானது தனுஷின் ‘குபேரா’ ட்ரெய்லர்.. 

 

 சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குபேரா’. இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாகார்ஜுனாவும் நடித்துள்ளார்.  தனுஷுக்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில்,   ‘குபேரா’ ஜூன் 20ம் தேதி திரைக்கு வருகிறது.  

அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  படத்தின் ஒவ்வொரு போஸ்டர்களும்  படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. அத்துடன் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழாவும் அந்த எதிர்பார்ப்புக்கு வலு சேர்த்துள்ளது.  மேலும் இந்தப்படத்திற்கு தனிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. 

தனுஷின் 51வது படமான குபேரா  வெளியாக இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை  படக்குழு வெளியிட்டுள்ளது.  ட்ரெய்லரின்  ஒரு பாதி, கோட் சூட்கள் அணிந்த வசதியான தோற்றமும், மறுபாதி அழுக்கு சட்டை, பரட்டை தலை, தாடியுடன் பிச்சைக்காரனாக இருப்பது போன்றும் உள்ளது. பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷை மீட்டு, நாகார்ஜுனா மறுவாழ்வு கொடுக்கிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்சனைகள் தான் படத்தின் கதைக்களமாக இருக்கலாம் என தெரிகிறது.  ‘குபேரா’ படக்குழு ட்ரெய்லரிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை  டபுள் ஆக்கியுள்ளனர்.  

<a href=https://youtube.com/embed/Eyl4sQFkQiM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Eyl4sQFkQiM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Kuberaa Official Trailer – Tamil | Dhanush | Nagarjuna | Rashmika Mandanna | Sekhar Kammula | DSP" width="640">