இட்லி கடைக்கு பின் தனுஷ் இயக்கப்போகும் அடுத்த படம்.அதிரடி அப்டேட்
Oct 13, 2024, 20:05 IST
நடிகராக முன்னணி அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் ராயன். இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ராயன் இருக்கிறது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.இப்படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து, இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், தணுஷ் அடுத்து இயக்கும் படம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இட்லி கடை படத்திற்கு பிறகு, தனுஷ் அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.