×

தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ரத்து

 

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ்.  இறுதியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு முன்னர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தனுஷ் நடித்துள்ள முதல் தெலுங்கு படமாகும். இந்த படத்தையடுத்து முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் இரண்டாவது தெலுங்கு படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி திருப்பதியில் நடைபெற்று வந்தது.

ஆனால், திருப்பதியில் படப்பிடிப்பு நடப்பதால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தனுஷின் படப்பிடிப்பு திருப்பதி போலீசார் ரத்து செய்தனர்.