துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் -ஹீரோயின் யார் தெரியுமா ?
Feb 24, 2026, 07:00 IST
துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைசன்: காளமாடன்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதையடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும், அப்படத்தில் அவரது ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில், துருவ் விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் தீபக் ரெட்டி இயக்குவதாக கூறப்படுகிறது.
இவர் ‘மனசநமஹ’ என்ற குறும்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். இப்படம் ரொமாண்டிக்குடன் கூடிய காமெடி கதையுடன் உருவாகிறது என்றும், இதில் மற்றொரு ஹீரோயினாக லீலா நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.