×

விரைவில் திரைக்கு வரும் 'துருவநட்சத்திரம்'.. விக்ரம் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு !

 

விக்ரம் பிறந்த நாளையொட்டி 'துருவ நட்சத்திரம்' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

நடிகர் விக்ரம் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. ஆக்ஷன் அதிரடி காட்சிகளுடன் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் கௌதம் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார்.  இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தில் ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்ட இப்படம் நிதி சிக்கல் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. 

இதையடுத்து இப்படத்தின் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் "Happy birthday chief" என்று வாழ்த்து சொல்லப்பட்டுள்ளது. அதோடு  துருவ நட்சத்திரம் தலைப்புடன் சாப்டர் 1 யுத்த காண்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.