மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணையும் இயக்குனர் பாலாஜி தரணிதரன்..
Feb 27, 2025, 16:50 IST
‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலாஜி தரணிதரன் உடன் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டிராஜ் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவடைந்த நிலையில், அடுத்து யார் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இயக்குனர் அட்லீ தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.
இதற்கான முன்தயாரிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டார்கள். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பினை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தினை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.