ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் : இயக்குனர் சேரன் பாராட்டு..
விக்ரம் நடித்த’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் என்று இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் சேரன், படக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் சேரன், நேற்றுதான் தங்கலான் பார்க்க நேர்ந்தது, ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகியோரின் அசுர உழைப்பும் அளவிடமுடியா திரை ஆற்றலும் காண முடிந்தது.. ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். கதை சொன்ன விதமும் காட்சிபடுத்திய விதமும் அசரவைத்தது.. முதல்பாதி முழுவதும் ஆங்கிலப்படமாகவே இருந்தது என தெரிவித்துள்ளார்.