×

திரையுலகம் குறித்து …சேரன் கூறியுள்ள 'சர்ச்சை கருத்து!'

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இந்தியா முழுக்கவே திரையரங்குகள் மூடப்பட்டன. பல மாதங்கள் கடந்தும் இப்போது வரை திரையரங்குகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை.இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள திரையுலகச் சூழல் தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “சிவாஜி, எம்ஜிஆர் என விசில் அடித்துப் படம் பார்த்து ரஜினி, கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்தத் திரையரங்க பிரம்மாண்டம்
 

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இந்தியா முழுக்கவே திரையரங்குகள் மூடப்பட்டன. பல மாதங்கள் கடந்தும் இப்போது வரை திரையரங்குகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை.இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள திரையுலகச் சூழல் தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சிவாஜி, எம்ஜிஆர் என விசில் அடித்துப் படம் பார்த்து ரஜினி, கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்தத் திரையரங்க பிரம்மாண்டம் 5 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.
நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடித் தீர்த்த மக்கள் செல்போனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்துப் பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள். எதிர்கால திரையுலகப் பயணம் எந்தத் திசை எனக் கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது திரையுலகம்.
இதில் மக்களின் கருத்து என்ன. அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா. திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?”
இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.

சேரன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிற்கு பல நல்ல படங்களை கொடுத்தவர். இவரது படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றவை .இத்தகைய பெருமைக்குரிய இயக்குனர் சினிமாவின் எதிர்காலம் திசை தெரியாமல் போய்க்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பும்படி இருந்தாலும் இதுதான் உண்மை நிலை என சிலர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.