×

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50000 அளித்துள்ள ‘தமிழ் படம்’ இயக்குனர்!

இயக்குனர் சிஎஸ் அமுதன், முதல்வர் நிவாரண நிதிக்கு 50000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிதி அளித்து பொதுமக்கள் பங்கெடுத்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதையடுத்து மக்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் திரைத்துறை பிரபலங்களும் பங்கெடுத்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சூர்யா குடும்பத்தினர் ஒரு கோடியும், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சமும்
 

இயக்குனர் சிஎஸ் அமுதன், முதல்வர் நிவாரண நிதிக்கு 50000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிதி அளித்து பொதுமக்கள் பங்கெடுத்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதையடுத்து மக்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவி வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் திரைத்துறை பிரபலங்களும் பங்கெடுத்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சூர்யா குடும்பத்தினர் ஒரு கோடியும், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சமும் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் சிஎஸ் அமுதன் 50,000 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்தப் பரிவர்த்தனையின் ஸ்கிரீன்ஷாட்டைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிந்துள்ளார்.

“நான் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளேன். இதுதான் எண்ட்கேம் தோழர்களே, தாராளமாக நன்கொடை அளிக்கவும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிஎஸ் அமுதன் தற்போது த்ரில்லர் படம் இன்றை இயக்கவுள்ளார்.அந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க உள்ளது குறிப்பிடதக்கது.