×

தனுஷின் அடுத்த படத்தை இயக்குவது எந்த இயக்குனர்  தெரியுமா ?

 
இயக்குனர் வினோத் தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் .இவர் நடிகர் அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார் .அவை வலிமை ,துணிவு ,நேர்கொண்ட பார்வை போன்ற படங்களாகும் இவையனைத்தும் வெற்றி பெற்ற படங்கள் ஆகும் .இவை தற்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்ற படத்தை இயக்கி வருகிறார் .இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் .இப்படம் வரும் ஜனவரியில் வெளியாக உள்ளது .அடுத்து இவர் யாரை  வைத்து படம் இயக்க உள்ளார் என்று எதிர்பார்ப்பு இருந்தது .
தற்போது  இந்தியில் தேரே இஸ்க் மெயின் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
தற்போது திடீர் ட்விஸ்ட் ஆக தனுஷ் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளாராம். இதன்மூலம் முதன்முறையாக தனுஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளார் சாம் சி.எஸ். மாஸ்டர், மகான், லியோ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைத் தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் தனுஷ் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தையும் தயாரிக்க உள்ளதாம். ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன பின்னர், தனுஷின் படப் பணிகளை எச்.வினோத் தொடங்குவார் என கூறப்படுகிறது.ஏற்கனவே தனுஷ் குபேரா கலவையான விமர்சனம் பெற்றது .எனவே அவருக்கு இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் ,இப்போது தனுஷ் இட்லி கடை என்ற படத்திலும் நடித்து வருகிறார் .