தனது பட டைரக்டருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த நடிகர் -யார் தெரியுமா ?
Dec 21, 2025, 06:00 IST
அரசியலில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வரும் பவன் கல்யாண், தனது பழைய படமான ‘ஹரிஹர வீர மல்லு’ என்ற படத்தில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அப்படம் தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து ‘ஓஜி’ என்ற படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்தது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, ‘ஓஜி’ படத்தின் இயக்குனர் சுஜித்துக்கு பவன் கல்யாண் கார் ஒன்றை பரிசளித்தார். ரூ.3 கோடி மதிப்பிலான லாண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை அவர் வழங்கியுள்ளார்.