“இன்னும் படத்திலிருந்து மீளவில்லை”... ‘மாமன்னன்’ படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ் !
‘மாமன்னன்’ படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ், மூன்றாவதாக இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்கில் வெளியானது. சுமார் 35 கோடியில் உருவான இப்படம் 65 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஃட்பிளிக்ஸ் இணையத்தளத்திலும் வெளியாகி டிரெண்ட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ட்விட்டர் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் இது தாமதம் என எனக்கு தெரியும். ஆனாலும் ‘மாமன்னன்’ திரைப்படம் சிறந்த படம். இந்த படத்தின் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இன்னும் படத்திலிருந்து நான் மீளவில்லை. உதயநிதி, மாரி செல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.