ரஜினி, அஜித்துடன் பணியாற்றவேண்டும் - தனது விருப்பத்தை வெளிப்படுத்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் !
ரஜினி, அஜித்துடன் பணியாற்றவேண்டும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பல ஹீரோக்களின் முதன்மை சாய்ஸ்சாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் பேசிய அவரின் சுவாரஸ்சிய வீடியோவை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ரஜினி மற்றும் அஜித் ஆகியோருடன் பணியாற்றவேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை. அது எப்போது நடைபெறப்போகிறது என்று தெரியவில்லை.
அதேபோன்று சின்ன வயதிலிருந்து ஏ.ஆர்.ரகுமான் என்றால் ரொம்ப பிடிக்கும். கண்டிப்பாக ஒரு முறையாவது அவருடன் பணியாற்றவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் பணி ரொம்பவே பிடிக்கும். அதனால் அவருடனும் பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதற்கிடையே ஹீரோயினுக்காக நிறைய எழுதினோம். அப்புறம் தான் யார் நடிக்கிறார் என்பதை பொறுத்து அந்த கதாபாத்திரத்தை செதுக்கமுடியும் என்று கூறினார்.