×

டென் ஹவர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்...!

 

சிபி சத்யராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ் படத்தின் 2 வது ஸ்னீக் பீக் காட்சியை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். 

அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி  ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன் என கதை உருவாகி உள்ளது.