இயக்குநர் மோகன் ஜி-யின் புதிய பட அறிவிப்பு
Feb 25, 2025, 18:48 IST
இயக்குநர் மோகன் ஜி இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் மோகன் ஜி. திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. திரைப்படங்களைத் தாண்டி அரசியல், கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து சர்ச்சைக்குரிய இயக்குநராகவே இருந்து வருகிறார்.இந்த நிலையில், மோகன் ஜி இயக்கும் அவரின் 5-வது திரைப்படத்தில் அறிவிப்பு நாளை பிப்ரவரி 26ஆம் தேதி காலை 11.59 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.