நடிகர் அஜித்துடன் இயக்குனர் நெல்சன் மற்றும் கவின்.. சர்ப்ரைஸ் மீட்..!
Sep 17, 2024, 12:42 IST
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஒருபக்கம் நடக்க அஜித் சமீபத்தில் இரண்டு சொகுசு கார்களை பல கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார். அதன் போட்டோ மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் அஜித்தை நடிகர் கவின் மற்றும் இயக்குனர் நெல்சன் இருவரும் சந்தித்து இருக்கின்றனர். மால் ஒன்றில் அவர்கள் சந்தித்து கொண்டிருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.