×

பாலிவுட்டில் நுழைகிறாரா இயக்குனர் பா. ரஞ்சித்...
 

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்த தங்கலான் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியில் செப்டம்பர் 6 -ம் தேதி வெளியாக உள்ளது.இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பா. ரஞ்சித் அவர் ஒரு இந்தி படத்தை இயக்கப்போவதாகவும், அதற்கு கையெழுத்திட்டிருக்கிறேன் என்றும், பிர்சா முண்டா என்று அந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

மேலும், இந்த படத்தின் ஸ்கிரிப்டை அவரும் அவர் நண்பரும் இணைந்து எழுதி உள்ளதாகவும், கிட்டத்தட்ட அந்த ஸ்கிரிப்ட் உறுதியாகிவிட்டதாகவும், தற்போது, நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும் விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.