×

அதிதி ஷங்கரைத் தொடர்ந்து கதாநாயகியாக அறிமுகமாகும் மற்றொரு பிரபல இயக்குனரின் மகள்!

 

இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக களமிறங்கி வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் இது பரவலாகத் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தற்போது பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் நடிகையாக அறிமுகமாகிறார். தரமணி பட நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.