☰
×

‘ஏழு கடல் ஏழு மலை’ படம் பற்றி இயக்குனர் ராம் என்ன சொல்கிறார் தெரியுமா ?

 

ராம் எழுதி இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராம் உருக்கமாக பேசியதாவது: கடந்த 2007 அக்டோபர் 6ம் தேதி, நான் முதல்முறையாக எழுதி இயக்கிய ‘கற்றது தமிழ்’ என்ற படம் திரைக்கு வந்தது.
வரும் 6ம் தேதியுடன் நான் திரையுலகிற்கு வந்து 19 வருடங்களை நிறைவு செய்து, 20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 
அதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகம், மீடியா மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கதை எலி, யானை, மரம், புல் ஆகியவற்றை பற்றியும் பேசுகிறது. பொதுவாக இந்த புவி, மனிதர்களுடன் வாழும் அனைத்துக்கும் சொந்தமானது என்பதை எனது கற்பனைக்கு ஏற்ற வகையில், மிகவும் சுவாரஸ்யமாக விவரிக்க முயற்சி செய்துள்ளேன். கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்கும். அடுத்து ஆக்‌ஷன் திரில்லர் கதையை எழுதி இயக்குகிறேன். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.