52 வது திருமண நாளில் மனைவிக்கு கார் பரிசளித்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்...!
Apr 24, 2025, 16:47 IST
52 வது திருமண நாள் கொண்டாடும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், மனைவி ஷோபனா சந்திரசேகரும் விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார்.
தமிழ் சினிமா இயக்குனரும், நடிகரும், நடிகர் விஜயின் தந்தையுமானவர் எஸ் ஏ சந்திரசேகர், இயக்குனராக பல சாதனைகளை படைத்தாலும் இப்போது நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராக படங்களையும் தயாரித்திருக்கிறார். தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு தேவையான அறிவுரைகளையும் சந்திரசேகர் வழங்கி வருகிறார்.