பிரபல நடிகையை ஆவேசமாக விமர்சித்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா... என்ன காரணம் தெரியுமா..?
சந்தீப் ரெட்டி வங்கா, தற்போது பிரபாஸின் ’ஸ்பிரிட்’ படத்தை இயக்கவிருக்கும் நிலையில் நடிகை ஒருவரை குறித்து அவரது எக்ஸ் தளத்தில் இடப்பட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோன். அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தீபிகா படுகோன் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. நேற்று சில ஊடகங்களில், இப்படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள், சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் கண்டிப்பாக ‘ஏ’ சான்றிதழ் தான் எனவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் தள பதிவில், “நான் ஒரு நடிகரிடம் கதையைச் சொல்லும்போது, 100 சதவீதம் நம்பிக்கையுடன் அதைச் சொல்கிறேன். எனக்கும் கதையைக் கேட்பவருக்கும் இடையே வெளிப்படையாக சொல்லப்படாத ஓர் உடன்பாடு ஏற்படுகிறது. ஆனால், உங்கள் செயலின் மூலம் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள். எனது கதையை நிரகாரித்தது மட்டுமின்றி ஓர் இளம் சக நடிகரை கீழே தள்ளிவிட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய பெண்ணியமா? ஒரு திரைப்பட இயக்குநராக நான் என் கலைக்கு எனது பல ஆண்டுகால உழைப்பைச் செலுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை சினிமாவை உருவாக்குவது தான் எல்லாமே. அது உங்களுக்கு புரியவில்லை. எப்பவுமே புரியவும் புரியாது.