×

டிராகன் படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி 

 

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.  திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டில் பெரும் வசூல் முழுவதும் நிறுவனத்திற்கு போனஸ் தான் என்றும் தெரிவித்து இருந்தது.


ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "டிராகன் மிக அழகான திரைப்படம். அருமையான எழுத்துக்கள் - இயக்குநருக்கு பாராட்டுக்கள். அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும், முழுமையாகவும் இருந்தது." "பிரதீப் ரங்கநாதன் தான் ஒரு அசாத்திய எண்டர்டெயினர் என்பதை வெளிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் திறமையான நடிகர் என்பதையும் உணர்த்தி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு  உயிர் கொடுத்துள்ளனர்."