×

ரஜினி-கமல் படங்களை இயக்கிய டைரக்டருக்கு கொரானா… மருத்துவமனையில் அனுமதி…

பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழின் தவிர்க்கமுடியாத இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.பி.முத்துராமன். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்த இவர், கலைத்துறை மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு சிவாஜி, ஜெய்சங்கர், கமலஹாசன் ஆகியோரின் படங்களை இயக்க தொடங்கினார். பின்னர் 1970-களில் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து 25க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘ப்ரியா’, ‘முரட்டுக்காளை’ போன்ற படங்கள்
 

பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழின் தவிர்க்கமுடியாத இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.பி.முத்துராமன். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்த இவர், கலைத்துறை மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு சிவாஜி, ஜெய்சங்கர், கமலஹாசன் ஆகியோரின் படங்களை இயக்க தொடங்கினார்.

பின்னர் 1970-களில் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து 25க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘ப்ரியா’, ‘முரட்டுக்காளை’ போன்ற படங்கள் ரஜினியை உச்சத்திற்கு கொண்டு சென்றன. ஒருபுறம் ரஜினியுடன் கூட்டணி அமைத்து வெற்றியை கொடுத்த அவர், மற்றொரு புறம் கமலுடன் இணைந்து ‘சகலகலா வல்லவன்’ ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘எனக்குள் ஒருவன்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’ போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றிப்பெற்ற மாபெரும் சாதனை இயக்குனர். வணிக ரீதியாக வெற்றிப்பெற்ற இப்படங்களுக்கு தமிழக அரசின் விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.