ரவி மோகனின் நடிப்பை காட்டிக் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா...
Feb 25, 2025, 17:37 IST
பராசக்தி படப்பிடிப்பின் போது நடந்த நகைச்சுவை நிகழ்வை இயக்குனர் சுதா கொங்கரா பதிவிட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கும் இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.மேலும் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக சுதா கொங்கரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் படம் குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டார்.