×

தந்தையர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன்.. இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வைரல் !

 

தந்தையர் தினத்தையொட்டி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். சிம்பு நடிப்பில் வெளியான ‘போடாபோடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

இதையடுத்து கடந்த ஆண்டு பிரபல நடிகையான நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை  பெற்றுக்கொண்டனர். தனது குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். 

சமீபத்தில் தனது முதலாம் ஆண்டு திருமண நாளை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கொண்டாடினர். இதையொட்டி தங்களது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பெற்றுள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.