×

இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குனர்கள்...!

 

இசைஞானி இளையராஜாவை சந்தித்து இயக்குனர்கள்  ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இசைஞானி இளையராஜா, 35 நாட்களில் தான் எழுதி முடித்த முழு சிம்பொனியை  ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் சாதனை படைத்த அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர். 

சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து விட்டு லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இளையராஜாவின் நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசு சார்பில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்பு அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் கௌரவம் அளிக்கப்பட்டது.