×

புதிய படத்திற்காக இணைந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' - 'ஆவேசம்' பட இயக்குனர்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு 
 

 

'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனர் சிதம்பரம் இயக்கும் புதிய படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சிதம்பரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டுமே ரூ.60 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கிடையில் இயக்குனர் சிதம்பரம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தற்போது சிதம்பரம் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சிதம்பரம் அடுத்ததாக மலையாளத்திலேயே மற்றொரு புதிய படத்தை இயக்க உள்ளார்.