×

 நடிகை திஷா பதானியின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி  

 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வருபவர் திஷா பதானி. அண்மையில் இவர் நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானியிடம் உத்தரபிரதேச அரசில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளனர். உ.பி. அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் அரசாங்க கமிஷனில் உயர் பதவி வாங்கு தருவதாக சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சிங் பதானியிடம் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை உண்மை என நம்பிய ஜெகதீஷ் சிங் பதானி, ரூ.20 லட்சத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதோடு, ரூ.5 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்துள்ளார். ரூ.25 லட்சம் பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாததால் மோசடி கும்பலிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது ஜெகதீஷ் சிங் பதானியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி இது தொடர்பாக போலிசீடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.