×

எனக்கு முடக்குவாத பிரச்சனையா?... நெட்டிசன்களை விளாசிய நடிகை ஆலியா பட்!

 

தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் முடக்குவாத நோய் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பரவும் செய்திகளுக்கு நடிகை ஆலியா பட் பதிலடி கொடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு முடக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக இணையவாசிகளின் கூறும் கருத்திற்கு பதிலடி கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல நடிகை ஆலியா பட் 'ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கங்குபாய் படத்திற்காக தேசிய விருது வென்றார்.

இந்நிலையில் ஆலியா பட் கொடுக்கும் நேர்காணல் மற்றும் அவர் நடிக்கும் விளம்பரங்களில் அவரது புன்னகை மற்றும் பேசும் விதம் வித்தியாசமாக இருப்பதாகவும், இதனால் அவருக்கு முடக்குவாத நோய் இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். இது குறித்து ஆலியா பட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “முகத்தின் அழகிற்காக காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மற்றும் மாற்றம் செய்து கொள்வோருக்கு எதிராக இந்த பதிவு கிடையாது, அவை உங்களது விருப்பம். ஆனால் என்னை பற்றி வலம் வரும் செய்து மிகவும் அபத்தமானது. எனக்கு போடோக்ஸ் சிகிச்சை (நரம்பு கோளாறு சிகிச்சை) செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் எனது சிரிப்பு, பேச்சு வித்தியாசமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் எனக்கு ஒரு பக்கம் முடக்குவாதம் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆதாரம் இல்லாமல் ஒருவரை பற்றி தவறாக சித்தரிப்பதால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும். இது போன்ற செய்தியை அறியாமையுடன் ஒரு சிலர் நம்பக்கூட வாய்ப்புள்ளது. ஒரு பெண்ணின் முகம், உடல், சொந்த வாழ்க்கை அவ்வளவு ஏன் கர்ப்ப காலத்தில் பெரிதாகும் வயிறை கூட தவறாக புரிந்து கொள்கின்றனர்.

 
இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு பெண்ணை பற்றி மற்றொரு பெண்ணே தவறாக புரிதலுடன் இருக்கின்றனர். இது போன்ற அடிக்கடி கேட்டு பழகிவிட்டதால் ஒருவரை பற்றி தவறாக ஒரு விஷயத்தை பரப்புவது மிகவும் சாதாரணமாகிவிட்டது” என கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆலியா பட் நடித்த ’ஜிக்ரா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.