×

"சிறிய படங்கள் ஓட இதை செய்ய வேண்டும்" -ஐடியா கொடுத்த பிரபல இயக்குனர் 

 

வள்ளிமலை வேலன் படத்தில் நாயகனாக நாகரெத்தினம் இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி நடித்துள்ளனர். 
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வி.சேகர் பேசியது: இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான், அதை புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும்.ஒரு காலத்தில் பல வெற்றிப்படங்கள் கொடுத்து கவனிக்க வைத்த இயக்குனர்கள் கூட இப்போது படம் எடுத்தால் ஓடுவதில்லை. காரணம், சினிமாவில் சூழல் மாறிவிட்டது
4 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தாலும், 250 தியேட்டர்களுக்கு மேல் ஓரு பெரிய படம் ரிலீஸ் ஆகாது. மீடியம் ரக படங்களுக்கு 100 தியேட்டர்கள் வீதமும், சிறிய படங்களுக்கு 50 தியேட்டர்கள் வீதமும் ஒதுக்கப்படும்போது, எல்லா படங்களும் ஓடும் நிலை இருந்தது.ஒரு மாதம் பெரிய படம் ரிலீஸ் என்றால், அடுத்த மாதம் சிறிய படங்கள் இறங்கவேண்டும். பெரிய படங்கள் ரிலீசாகாத போது சிறிய படங்கள் இன்னும் அதிகம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் .
நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தர மாட்டார்கள், ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும். படத்தை நல்ல தியேட்டர் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள் என்றார்.