×

விராட் கோலிக்கு பிடித்த பாடல் எது தெரியுமா... சிம்பு ரசிகர்கள் உற்சாகம்...!

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடிகர் சிம்புவின் பாடலே தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் உலகில் விராட் கோலி ரன்மெஷின் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்த ஒரே வீரராக உலா வருகிறார். இந்திய அணியின் வெற்றிக்காக பல போட்டிகளில் தனி ஆளாக போராடியுள்ளார். ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரரமான விராட் கோலியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, அவரிடம் உங்களுக்கு இப்போது மிகவும் பிடித்த பாடல் எது தெரியுமா? என்று கேட்கப்பட்டது. 

விராட் கோலி தனக்கு பிடித்த பாடல் என்று குறிப்பிடும் இந்த நீ சிங்கம்தான் பாடலை கிரிக்கெட் வீரர்களான தோனி, கோலி, ரோகித் போன்ற மிகப்பெரிய வீரர்களுக்கு சமர்ப்பிக்கும் விதமாக ரசிகர்கள் எடிட் செய்து வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலியின் வீடியோவை பகிர்ந்துள்ள நடிகர் சிம்பு, விராட் கோலியை 'நீ சிங்கம் தான்' என குறிப்பிட்டுள்ளார்.